தேதி சொல்லாம போராட்டத்துல குதிச்சா என்னா பண்ணுவீங்க? - வீட்டு காவலுக்கு அண்ணாமலை கண்டனம்

Prasanth Karthick

திங்கள், 17 மார்ச் 2025 (11:31 IST)

இன்று டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக போராட்டம் நடத்த இருந்த நிலையில் பாஜக தலைவர்கள் வீடுகளில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய ரெய்டில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டத்தை பாஜக திட்டமிட்டிருந்த நிலையில் பாஜக பிரமுகர்கள் வீடுகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் திரு வினோஜ் பி செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது. 

 

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.

 

ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? 

 

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்