நியூசிலாந்து நாட்டில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான தேசிய கட்சி அதிக இடங்களை வென்றது. அதன்பின்னர் 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், கிறிஸ்டோபர் லக்சன் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.
அப்போது, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிகரெட்டில் கூறைந்த அளவிலான நிகோடின், சில்லறை விற்பனை குறைப்பு, இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்டவற்றை ரத்து செய்ய புதிய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.