இயற்கை சீற்றம் பேரழிவு போன்ற காலங்களில் உயிர் மற்றும் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்படுகிறது. அக்கால கட்டங்களில் தங்களால் இயன்ற வரை தங்களை காத்துக்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இயற்கை பேரிடரான சுனாமி., நிலநடுக்கம் வெள்ளம் தீ விபத்து பஞ்சம் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்லூரி மாணவ மாணவியர்கள் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் சாரணர் இயக்கம் செஞ்சிலுவைச்சங்கம் அலுவலர்கள் பணியாளர்கள் போன்றவர்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள திட்டமிடல் தேடுதல் மீட்டல் போன்றவைகளுக்காகவும் பயிற்சி மற்றும் மாதிரி ஒத்திகையின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ்., மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் கணேசன் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி பேரிடர் மீட்பு வட்டாட்சியர் வேலுச்சாமி உட்பட பலர் உடனிருந்தனர்.