கேரளாவில் கனமழை பொழிந்து வருகிறது. ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று அனைத்தும் முடப்பட்டுள்ளது.
மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 3,15,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அபுதாபியை தலைமயிடமாக கொண்டு பல நாடுகளில் இயங்கும் லூலூ சூப்பர் மார்க்கெட்டின் தலைவர், யூசுப் அலி கேரள மக்களுக்கு 26 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். யூசுப் அலி கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர் ஆவார். அவருக்கு பலர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.