பெரிய அளவு வாக்கு வங்கி இல்லாத தேமுதிக, ஆரம்பம் முதலே கொஞ்சம் ஓவராய் தான் போய்க்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அதிமுக பாமகவிற்கு 7 சீட் கொடுத்த பின்னர், தங்களுக்கு 7 அல்லது அதற்கு மேலான சீட்டுகளை கொடுத்தால் தான் கூட்டணி என அதிமுகவிடம் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது தேமுதிக.
இன்று அதிமுக சார்பில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க இருக்க்கும் நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளால் அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில் விஜயகாந்த் புகைப்படம் இல்லை. அவரை தவிர மற்ற அனைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இருக்கின்றது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அதிமுக தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் எனவும் அதிலும் 2 இடங்கள் தனித்தொகுதிகளாக வழங்கமுடியும் என கூறியுள்ளதாம். இறுதியில் தேமுதிக 4 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் 2 ரிசர்வ் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தான் பிரச்சனையாக உள்ளது எனவும் அதுவே இந்த இழுபறிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.