ஆன்மீக சொற்பொழிவாளர் நள்ளிரவில் கைது.. அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக தகவல்.!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:06 IST)
ஆன்மீக சொற்பொழிவாளரும், முன்னாள் விஷ்வ பரிஷத் இயக்க தலைவருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன் நேற்று நள்ளிரவி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
 
அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்டோர் குறித்து மணியன் பேசிய வீடியோவுக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டில், நள்ளிரவில் கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவரை விசாரணை செய்து வருவதாகவும், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்