இன்னும் ஒரு மணி நேரத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஞாயிறு, 2 ஜனவரி 2022 (14:52 IST)
இன்னும் ஒரு மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த இரண்டு மூன்று நாட்களாக திடீரென சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
ஏற்கனவே இன்று காலை தஞ்சாவூர் திருவாரூர் நாகை கடலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்