பாஜகவில் இணைந்தார் எழிலரசி: கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர்!

வியாழன், 21 ஜனவரி 2021 (10:44 IST)
பாஜகவில் இணைந்தார் எழிலரசி: கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர்!
புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற பெண்ணொருவர் சற்றுமுன் பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகம் மற்றும் புதுவையில் வரும் மே மாதம் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பல பிரபலங்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர் 
 
அந்த வகையில் புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற எழிலரசி என்பவர் சற்றுமுன் பாஜகவில் இணைந்துள்ளார். இவரை புதுவை மாநில பாஜக தலைவர் வரவேற்று பாஜக உறுப்பினர் அட்டையை அவருக்கு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எழிலரசியின் வரவு பாஜகவிற்கு புது தெம்பை தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
ஏற்கனவே தமிழகத்தில் பல ரவுடிகள் பாஜகவில் இணைந்து உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் முன்னாள் சபாநாயகர் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்ற எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்