தனியார் மருத்துவமனையின் சர்வர் ஹேக்.. லட்சக்கணக்கான நோயாளிகள் தரவுகள் திருட்டா?

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:18 IST)
தனியார் மருத்துவமனையின் சர்வர் ஹேக் செய்யப் பட்டதாகவும் இதனால் லட்சக்கணக்கான நோயாளிகளின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக வெள்யாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தனியார் மருத்துவமனையின் சர்வர் ஹேக் செய்யப்பட்டு சுமார் ஒன்றரை லட்சம் நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி வேறொரு இணையதளத்திற்கு விற்றுவிட்டதாக இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் இதுவரை 19 லட்சம் சைபர் தாக்குதல் இந்திய மருத்துவத் தரவு தளங்கள் மீது நடத்தப்பட்டதாகவும் குறிப்பாக பாகிஸ்தான் சீனா வியட்நாம் நாடுகளில் இருந்துதான் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்