இந்நிலையில் மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் பணி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டிற்கு மாவட்ட வாரியாக எவ்வளவு தொண்டர்கள் அழைத்துவரப்பட வேண்டும், காவல்துறையினரின் விதிமுறைகளை பின்பற்றி நடப்பது, ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவது, சிறப்புற மாநாட்டை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.