மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தமிழகத்தின் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது.
இந்நிலையில் முஸ்லீம் மக்களின் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்து பேசியுள்ள பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் ”குடியுரிமை சட்டம் எந்த மக்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக இஸ்லாமிய மக்களை தூண்டிவிட்டு ஆங்காங்கே போராட்டங்களை ஏற்படுத்தி வருகிறது” என தெரிவித்துள்ளார்.