நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, பொள்ளாச்சி கொடூரத்துக்கு தரவில்லை? - தேசிய ஊடகங்களை விளாசிய நீதிபதிகள்!

செவ்வாய், 12 மார்ச் 2019 (17:56 IST)
மதுரை: நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, பொள்ளாச்சி கொடூரத்துக்கு ஏன் தேசிய ஊடகங்கள்  தரவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.


 
பொள்ளாச்சியில், ஏராளமான கல்லூரி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து , ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய விவாகரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் சமூக வலைதளத்தில் கடும் கொந்தளிப்பு காணப்படுகிறது. பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இதனால் இந்த பாலியல் கொடூரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில்  தஞ்சாவூர்  பட்டுக்கோட்டையைச் சேந்த சாம்பசிவம் என்பவர் கஜா புயல் பாதிப்பு நிவாரணம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துளளார்.இந்த வழக்கை உயர்நிதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர்  அமர்பு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது, நிர்பயாவிற்கு தரப்பட்டமுக்கியத்துவம் பொள்ளாச்சியியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரப்படவில்லை. தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை புறக்கணிக்கின்றன என் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் தேசிய ஊடகங்கள் நகர்புறங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஊரகப் பகுதிகளுக்கு கொடுப்பதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்