சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி: மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு

ஞாயிறு, 5 மார்ச் 2023 (09:33 IST)
சென்னையில் அரசு பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் போக்குவரத்து சங்கங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் என்ற முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பல அரசியல் விமர்சகர்கள் இந்த முடிவை வரவேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
போக்குவரத்து கழகங்கள் அடிக்கடி திடீர் திடீரென வேலை நிறுத்தம் செய்வதை அடுத்து தனியாருக்கு போக்குவரத்து பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தால் வேலை நிறுத்தங்கள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக சென்னையில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் அதன் பின் படிப்படியாக தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்