சென்னையில் குப்பையில்லா சாலைகள்: மாநகராட்சி நடவடிக்கை..!

ஞாயிறு, 5 மார்ச் 2023 (08:50 IST)
சென்னையில் குப்பையில்லா சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் உள்ள 18 பிரதான சாலைகளை குப்பையில்லா சாலைகளாக பராமரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 
 
இந்த குறிப்பிட்ட சாலைகளில் குப்பையை வீசியவர்களிடமிருந்து மற்றும் 64 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கத்தீட்ரல் சாலை, எலியடஸ் கடற்கரை சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை  உள்ளிட்ட 18 சாலைகளில் குப்பையில்லா சாலை திட்டம் பராமரிக்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
படிப்படியாக சென்னையில் உள்ள அனைத்து சாலைகளையும் குப்பை இல்லா சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீர்மிகு சென்னையாக மாற்றப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்