பள்ளிகளில் கட்டாய மதமாற்றம்..?? – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!
புதன், 4 மே 2022 (18:16 IST)
அரசு பள்ளிகளில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த சில நாட்கள் முன்னதாக தஞ்சாவூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கு கட்டாய மதமாற்றமே காரணம் என சிலர் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து சமீபத்தில் கன்னியாக்குமரி அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவர்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக வெளியான புகாரில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.