இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நாட்கள் தவிர மீத நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.