வண்டலூர் பூங்காவிற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் பொதுமக்கள்!
ஞாயிறு, 1 ஜனவரி 2023 (16:51 IST)
புத்தாண்டு தினத்தில் குழந்தைகளுடன் வண்டலூர் பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
புத்தாண்டு விடுமுறை என்பதால் அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து உள்ளார்கள் என்பதும் குறிப்பாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏராளமான மக்கள் குவிந்து உள்ளதால் டிக்கெட் கொடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் ஊழியர்கள் குறைவாக இருப்பதால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது
இதனை அடுத்து வண்டலூர் பூங்காவில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் பொதுமக்கள் அனுமதிக்காததால் பல பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய தகவல் வெளியாகியுள்ளது