இந்நிலையில் பாஜகவின் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி காணொளி காட்சியில் ஹிந்தியில் பேசினார். இந்தப் பேச்சு புரியாமல் பலர் தூங்கினர். மேலும் சிலர் செல்போனில் பேசியும், விளையாண்டும் பொழுதைக் கழித்தனர்.
ராமநாதபுர மாவட்டம் முதுகொளத்தூர், கமுதி, கடலாடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பாஜக உறுப்பினர்களுடன் மோடி கலந்துரையாடினார். ஆனால் மக்கள் பலரும் மோடியின் ஹிந்தி பேச்சு புரியாமல் தூங்கிவிழுந்தனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.