மகேஷ் என்பவர் சிங்கப்பூரில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். தனக்குக் கிடைக்கும் விடுமுறையில் இவர் அடிக்கடி காஞ்சிபுரம் வந்து செல்வதுண்டு. அப்படி ஒருநாள் இவர் விடுமுறைக்கு காஞ்சிபுரம் வந்த சமயத்தில் மதுபோதைக்கு அடிமையான அவர் குடித்துவிட்டு பெற்றோரிடம் தகராறு செய்துவிட்டு தூக்கில் தொங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வந்துள்ள செய்திகளாவது : சம்பவம் நடைபெற்ற அன்று மப்பு தலைக்கேற மதுகுடித்துவிட்டு வந்த மோகனச் செல்வன் தன் பெற்றோரிடம் தகராறு செய்து அவர்களை அடிக்கச் சென்றிருக்கிறார். இதனால் கோபாவேசம் அடைந்த தந்தை மணி தன்னுடைய இரண்டு மகன்களுடன் சேர்ந்து மோகனச் செல்வனை அடித்து தூக்கில் தொங்கவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.