அதிகாரிகள் பேச்சுவார்த்தை எதிரொலி: சிறுவனின் உடலை பெற்று கொண்ட பெற்றோர்!

திங்கள், 28 மார்ச் 2022 (18:52 IST)
அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து வேன் மோதி பலியான சிறுவனின் உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியது
 
இன்று காலை இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வேன் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இதனையடுத்து பள்ளி தாளாளரை கைது செய்யும்வரை சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து அரசு அதிகாரிகள் சிறுவனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தற்போது சிறுவனின் உடலை பெற்றோர் வாங்க சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் நாளை காலை வளசரவாக்கத்தில் உள்ள சமாதியில் சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்