தாளாளரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்: வேன் மோதி பலியான சிறுவனின் தாய்!

திங்கள், 28 மார்ச் 2022 (18:25 IST)
தாளாளரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்: வேன் மோதி பலியான சிறுவனின் தாய்!
பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை இவரை சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என உயிரிழந்த சிறுவனின் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஆழ்வார்திருநகரியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வேன் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிறுவனின் தாயார் பள்ளி தாளாளர் கைது செய்யும் வரை சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என கூறியுள்ளார்
 
இன்று காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு அவனை அனுப்பினேன் என்றும் 8 40 மணி விபத்து ஏற்பட்டது என்று என்னை அலைய விட்டார்கள் என்றும் என்ன நடந்தது என்று பள்ளியின் தரப்பில் இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை என்றும் கூறினார் 
எனது மகனின் வயிற்றில் பள்ளி வாகனம் ஏறி இறங்கி உள்ளது என்றும் பள்ளி தாளாளர் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்