இந்நிலையில் சசிக்கலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் அதிமுகவினருக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் குட்டிக்கதை ஒன்றை சொல்லி “மனம் திருந்தி வருபவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான் தலைமைக்கு அழகு” என பேசியுள்ளார். ஓபிஎஸ் மறைமுகமாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து சூசகமாக பேசியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.