வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும்- வானிலை மையம்
செவ்வாய், 9 நவம்பர் 2021 (15:39 IST)
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியில் 6 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.