''மக்கள் தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது ''- முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி, 11 மார்ச் 2022 (15:59 IST)
தமிழகத்தில் கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மாநாடு நடந்து வருகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என காவல்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.