திருப்பதி ஏழுமலையானாக மாறிய நித்தி... வைரல் க்ளிக்ஸ்!!

சனி, 10 ஏப்ரல் 2021 (09:57 IST)
சர்ச்சைக்குரிய வகையில் வெங்கடேசப் பெருமாள் வேடம் போட்ட நித்தியானந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல். 

 
சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி கைலாசா ரிசர்வ் பேங்க், கைலாசா கரன்சிகள், கைலாசா தங்க நாணயம் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அதன் பின்னர் கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிப்பையும் வெளியிட்டார். 
 
நித்தியாந்தா தன்னை அவ்வப்போது கடவுளின் அவதாரம் என்று கூறிவார். இதற்கு ஏற்ப தற்போது திருப்பது எழுமலையானின் வேடமனிந்து இந்த அவதாரத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.மேலும் இதற்கு நித்யானந்தா பாவ சமாதி தரிசனம் என்று பெயரிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்