மணிப்பூர் விவகாரம்: தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் தேசிய மகளிர் ஆணையம்..!

வியாழன், 20 ஜூலை 2023 (14:09 IST)
மணிப்பூரில் இரண்டு பெண்கள்  ஒரு கூட்டத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து தாமாகவே முன்வந்து மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மணிப்பூரில் நடந்த கலவரத்தின் போது இரண்டு பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தின் போது இரண்டு பெண்களுக்கு எதிரான நடந்த வன்முறை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது,.  
 
ஏற்கனவே மணிப்பூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இம்பால் டிஜிபி கூறியுள்ள நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணையமும் களத்தில் இறங்கி உள்ளதால் விரைவில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்