மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் காசம்மாள் (70). வீட்டில் தனியாக வசித்து வந்த இவர், ஜூலை 8ம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் நகைகள் என மொத்தம் 65 பவுன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. நகைக்காக கொலை நடைபெற்றதாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே சந்தேகத்தின் அடிப்படையில் மருமகள் சுதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது மாமியாரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டர் பாக்கியராஜிக்கும் சுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மாமியார் மருமகளை கண்டித்துள்ளார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.