கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் முபின் என்ற நபர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலியான முபினின் வீட்டிலிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது போலீஸார் வெளியிட்டுள்ள தகவலில் முபின் வீட்டில் மொத்தம் 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பொருட்களை தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் முபின் வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை விசாரிக்கும்போது விரிவான தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.