இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்த தேவி, குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துகொள்ள அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதையடுத்து முகேஷ் சவுத்ரி என்பவரைத் திருமணம் செய்துகொள்ள அவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் திருமணம் செய்துகொள்ள அவர் நினைக்கையில் அவரின் குழந்தை அவருக்கு தடையாக இருந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். சிறுவன் காணாமல் போனது குறித்து கிராமத்தாருக்கு சந்தேகம் வர போலிஸுக்கு தகவல் சொல்லியுள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில் தர்மஷீலா மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.