மீண்டும் ஊரடங்கு அறிவிக்கும் சூழலை ஏற்படுத்தாதீர்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (09:47 IST)
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் ஊரடங்கு பிறப்பிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள சூழலில் தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டபோது கொரோனா பரவல் வெகுவாக குறைந்தது. தற்போது தளர்வுகளால் மெல்ல அதிகரிக்கிறது. மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தளர்வுகள் அளிக்கப்பட்டாலே மக்கள் கொரோனா விதிமுறைகளை மறந்து கூட தொடங்குவது வேதனையை அளிக்கிறது. மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கும் சூழலை ஏற்படுத்தி விடாதீர்கள் என சற்று கடுமையாகவே கூறிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்..

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோவை காண…

#COVID19 அனைவரது வாழ்க்கையையும் முடக்கிப்போட்டிருக்கும் காலகட்டத்தில், இதிலிருந்து மீள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுத்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; #ThirdWave தடுப்போம் #MASKUpTN pic.twitter.com/4iNtdirZ8o

— M.K.Stalin (@mkstalin) August 1, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்