மரம் விழுந்து பலியான பெண் காவலரின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி: முதல்வர் உத்தரவு
செவ்வாய், 2 நவம்பர் 2021 (14:41 IST)
சென்னை தலைமை செயலகம் அருகே மரம் விழுந்ததால் பெண் காவலர் கவிதா என்பவர் இன்று காலை சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
மேலும் கவிதாவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் அளிக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார் இதனை அடுத்து கவிதா குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு காவலர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது