பாஜக எதிர்ப்புக் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டும் - ஸ்டாலின் காட்டம்!

திங்கள், 15 பிப்ரவரி 2021 (15:24 IST)
மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம். 

 
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவி திஷா ரவி என்பவர் க்ரேட்டா தன்பெர்கின் கருத்துகளை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம் போலீஸார் திஷா ரவி வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக அவரை கைது செய்துள்ளனர்.
 
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பெங்களூரு மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அரசை விமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது. 
 
மேலும் இத்தகைய தண்டிக்கும் போக்கைத் தவிர்த்து, இளைஞர்களிடம் இருந்து எழும் எதிர்ப்புக் குரல்களுக்குச் செவிமடுக்கவேண்டும் என்று பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது கண்டனத்தை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்