ஜக்கி வாசுதேவின் ”மிஷன் காவிரி”: அதிரடி திட்டம்

ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (09:41 IST)
ஜக்கி வாசுதேவ் காவிரி நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நதிகளை மீட்பதற்காக மக்களின் ஆதரவு பெற “மிஸ்டு கால்” கொடுக்க சொன்னார். கோடிக்கணக்கான பேர் அதற்கு ஆதரவு அளித்து மிஸ்டு கால் கொடுத்தனர். அந்த ஆதரவுகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்பித்தார்.

பின்பு நதிகளை மீட்டெடுப்பதற்கான வரைவு திட்டத்தை உருவாக்கினர்.
இதன் அடுத்த கட்டமாக தற்பொது காவிரி நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக, ஜக்கு வாசுதேவ் அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதாவது 83 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காவிரி வடிநில பகுதியில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரக்கன்றுகள் நடப்பட இருப்பதாகவும், இதன் முதல் கட்டமாக அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரக்கன்றுகள் நடப்பட இருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். இந்த திட்டற்கும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


கடந்த 2017 ஆம் ஆண்டு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள காடுகளை அழித்து ஆதி யோகி சிலை எழுப்பியதாக ஜக்கு வாசுதேவ் மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்