செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு.. காணொளி மூலம் ஆஜர்..!

Mahendran

வியாழன், 4 ஜனவரி 2024 (14:40 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் ஒருமுறை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி 11ஆம் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

பண பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது.

ALSO READ: லாலு கட்சி எம்.எல்.ஏ நாக்கை அறுத்தால் ரூ.10 லட்சம்.. இந்துத்துவா அமைப்பு அறிவிப்பு..!

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து அவர் காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். இன்று அவர் நேரில் ஆஜர் படுத்தப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில்  காணொளி மட்டுமே ஆஜர் படுத்தப்பட்டார்.

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் ஜனவரி 11ஆம் தேதி வரை நீட்டிப்பு என சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்