சட்டசபையில் வெடித்த பாலியல் புகார்: அமைச்சர் மறுப்பு

வியாழன், 28 ஜூலை 2016 (13:42 IST)
தேனி மாவட்டம் மேகமலையிலுள்ள கடமலைக்குண்டு பகுதிய சேர்ந்த பழங்குடியின பெண்களுக்கு அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. இந்த பிரச்சனை குறித்து நேற்று சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.


 
 
வனத்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் பெண்களின் ஆடைகளை களைவதாக பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது சில தினங்களுக்கு முன்னர் கவனத்தை பெற்றது.
 
இந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் அகஸ்டின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன், பழங்குடியின பெண்களை, அதிகாரிகள் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுவது தவறானது என தெரிவித்தார்.
 
மேலும், பழங்குடியின மக்கள் வன ஆய்வாளரையும், வன அலுவலகத்தையும் தாக்கி சூறையாடியுள்ளனர். பழங்குடியின மக்களின் புகார் குறித்து கோட்டாச்சியர் விசாரணை நடத்தியதில் அதிகாரிகள் மீது எந்த தவறும் இல்லை என தெரியவந்துள்ளது என அமைச்சர் பதிலளித்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்