கலெக்டர் முன்னிலையில் அமைச்சர்-திமுக எம்.எல்.ஏ மோதல்: பெரும் பரபரப்பு

வெள்ளி, 15 நவம்பர் 2019 (15:27 IST)
அதிமுக, திமுகவினர்களுக்கு இடையே காலங்காலமாக மோதல்கள், கண்டன அறிக்கைகள், குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் ஆகியவை தினமும் நடந்து வருவது தமிழகத்தில் வழக்கமான ஒன்று ஆகும். எந்த கட்சிகள் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுகவும் திமுகவும் மட்டும் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு இரு கட்சிகளும் எதிர்க்கட்சிகளாக மட்டுமின்றி எதிரிக்கட்சிகளாகவும் உள்ளது
 
இந்த நிலையில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் திடீரென அதிமுக-திமுக இடையே பெரும் மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமார் இடையே முதலில் கடும் வாக்குவாதம் ஏர்பட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடந்த இந்த வாக்குவாதம் பின்னர் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஆகும் அளவுக்கு சீரியஸ் ஆனதாகவும், இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஒரு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒரு அமைச்சரும் எம்.எல்.ஏவும் மோதிக்கொள்வதை அநாகரீகமானது என்று அந்த பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்