திலகத்தின் தோழி ஒருவரோடு ஜெயவேலுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது காதல் உணர்வு மிகுதியால் தனது ஆட்டோவில் அந்த மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரோடு தனது காதலியியின் பெயரையும் எழுதியுள்ளார் ஜெயவேல். இதனால் மனைவி திலகத்துக்குத் தெரிந்து சண்டை போட ஆரம்பித்துள்ளார். அப்போது என்னைக் கொலை செய்துவிட்டு அவளோடு வாழ்ந்துகொள் என சொன்னதை எடுத்து குடிபோதையில் இருந்த ஜெயவேல் தலையணையை வைத்து அழுத்தியும் திலகத்தின் புடவையால் அவரைக் கழுத்தை நெறித்தும் கொலை செய்துள்ளார் ஜெயவேல்.