4000 அடி பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி எதிரொலி: கோவிலை சுற்றி வர தடை

செவ்வாய், 17 அக்டோபர் 2017 (17:54 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நாமக்கல் அருகேயுள்ள எருமப்பட்டி என்ற பகுதியில் தலமலை சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் ஆபத்தான சுற்று சுவரை சுற்றி வந்த முசிறியை சேர்ந்த ஆறுமுகம் என்ற பக்தர் எதிர்பாராதவிதமாக 4000 அடி பள்ளத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியானார்.



 
 
இதனையடுத்து இந்த கோவிலுக்கு ஆபத்தான பகுதி வழியாக செல்ல தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது இந்த கோவிலில் உள்ள ஆபத்தான சுவற்றை சுற்றி வர காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
 
இருப்பினும் இந்த கோவிலுக்கு மாற்று வழியில் செல்ல தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்