தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டம் நேற்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. இந்நிலையில் கேள்வி நேரம் முதல் முறையாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இது குறித்து தமிழக அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழக அரசுக்கு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் அனைத்து நிகழ்வுகளும் விடுபடாமல் ஒளிபரப்பப்படுவதையும், யூடியூப் சேனலில் அந்த வீடியோக்கள் இடம்பெறுவதையும் அரசு உறுதிசெய்யவேண்டும் என ஆலோசனைக் கூறியுள்ளது.