மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி மூன்றாம் தேதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக பிப்ரவரி நான்காம் தேதியும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக வருகிற மக்களுக்கு தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும், அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்களவை தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.