18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
மேலும், சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகளை 48 மணி நேரத்தில் அகற்ற அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.