இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சோனியா காந்தி கூறியதாவது: ''மக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்ற நிதியை முடக்கியுள்ளது ஜன நாயக விரோத செயலாகும். இந்தச் சவாலான சூழ் நிலையில், தேர்தல் பிரசாரம் திறம்பட மேற்கொள்ள எங்களால் முடிந்தவற்றை செய்து வருகிறோம். காங்கிரஸ் வங்கி கணக்குகளை முடக்கி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல்காந்தி, ''இது காங்கிரஸ்கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் அல்ல. இது இந்திய ஜனநாயகத்தின் முடக்கம். இது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.