கடலூர் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி! மன அழுத்தம் காரணமா?

வியாழன், 14 ஜூன் 2018 (19:39 IST)
கடலூரை சேர்ந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக காவல்துறையில் உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. பணிச்சுமை மற்றும் உயரதிகாரிகளின் டார்ச்சர் ஆகியவையே இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில் கடலூரை சேர்ந்த சவிதா மற்றும் அவரது கணவர் சத்தியசீலன் ஆகிய இருவரும்  கடலுார் மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சவீதா நேற்று திடீரன தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது சவித அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
 
அதிக பணிச்சுமை காரணமாகவும், தன்னை உயரதிகாரிகள் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சவீதா கூறியுள்ளார்.
 
ஆனால் இந்த குற்றச்சாட்டை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். சவீதா தற்கொலை குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்