25 பேர் விஷம் குடிக்க முயற்சி: நெய்வேலி என்.எல்.சியில் பரபரப்பு

திங்கள், 28 மே 2018 (09:55 IST)
என்.எல்.சி. ஊழியர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் நிலையில் அந்த நிறுவனத்தின் 25 ஊழியர்கள் திடீரென விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பணி நேரம் குறைப்பு, பணியிட மாற்றத்தால் ஏற்பட்ட விரக்தி ஆகிய காரணங்களால் போராட்டம் செய்து வந்த ஊழியர்களில் 25 பேர் இன்று விஷம் குடித்த தற்கொலை செய்ய முயன்றனர்.
 
இந்த 25 பேர்களும் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலத்தை வழங்கியதால், ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்றும், ஆனால் உரிய மரியாதை கொடுக்காமல் நிர்வாகம் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காததால் விரக்தி அடைந்தததாகவும் கூறப்படுகிறது.
 
25 பேர்களின் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டு தற்போது அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்