கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் திடீர் மரணம்

திங்கள், 3 ஜூலை 2017 (23:02 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் பல மர்ம சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று அங்கு பணிபுரிந்த கம்ப்யூட்டர ஆபரேட்டர் திடீரென மரணம் அடைந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என அங்குள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.



 
 
கொடநாடு அருகே உள்ள தென்கரை என்ற கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு கண்ணில் திடீரென நோய் தொற்றுநோய் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரிகிறது.
 
ஆனால் கடந்த சில நாட்களாகவே அவர் கடும் மன உலைச்சலில் அவர் இருந்ததாகவும் கண் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், மன உலைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகின்றன. இந்த தற்கொலை சம்பவம் குறித்து சோலூர்மட்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்