புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலமாக உள்ள பாகூர் ஏரியை சுற்றி 3000 மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வந்திருந்தார். மரக்கன்று நடும் வேலையில் தீவிரமாக இருந்த அவர் தன்னுடைய செல்போனைத் தேட தன் பையினுள் பார்க்க மாயமாகியுள்ளது.