இந்நிலையில், இன்று, சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்செல்போனை (Galaxy Fold) தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர். இந்த புதுவகையிலான மடிக்கும் செல்போனை வாங்குவதற்காக வாடிக்கையாளர், அங்குள்ள, சாம்சங் கடைகளில் வரிசையாக நின்றிருந்தனர்.
இந்த மடிக்கும் வகை ஸமார்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால், இதன் திரையை தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஒரே நேரத்தில் 3 செயலிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.