தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதால் தலைதெறிக்க ஓடிய முதலீட்டாளர்கள்

வியாழன், 4 மே 2017 (14:54 IST)
தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம், தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதன் காரணமாக தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவுக்கு தலைதெறிக்க ஓடிவிட்டனர்.



 

 
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கியா மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் கேட்ட லஞ்சத்தால் அந்நிறுவனம் தற்போது ஆந்திராவில் தொழில் தொடங்கியுள்ளது. 
 
பொதுவாக முதலீட்டார்கள் ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்கும் போது அந்த நிறுவனத்துக்கு வரி விலக்கு, மின் கட்டணத் தள்ளுபடி போன்ற வசதிகள் கேட்டனர். இதற்கு தமிழக அரசியல்வாதிகள் 50 சதவீதற்கு மேல் லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து கியா நிறுவனம் ஆந்திராவைச் நோக்கி சென்றது.
 
அங்கு கியா நிறுவனம் கேட்ட வசதிகளை மாநில அரசு செய்துக்கொடுத்தது. இதையடுத்து கியா நிறுவனம் ஆந்திராவில் தொழில் தொடங்கியது. இதனால் தமிழ்நாடு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை மற்றும் ஏராளமான இளைஞர்களின் வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்