திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிப்பு – கரூரில் தி.மு.கவினர் கொண்டாட்டம் (வீடியோ)

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:31 IST)
அண்ணாவின் மறைவிற்கு பிறகு கடந்த 1969-ம் ஆண்டு முதன்முறையாக திமுக கட்சியின் தலைவராக கலைஞர் கருணாநிதி நியமிக்கப்பட்டார். 
 
கடந்த 50 ஆண்டுகளாக திமுக-வின் தலைவராக பதவி வகித்து வந்த கருணாநிதி கடந்த 7-ம் தேதியன்று மரணமடைந்தார்.
 
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் செயல் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் தி.மு.க தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.  
 
பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க.தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 
 
இந்நிலையில் கரூரில் தி.மு.க-வினர் பேருந்து நிலையம் அருகே வெடி வைத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
-சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்