தமிழகத்தின் நாகப்பட்டிணம், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும் வழக்கமாக உள்ளது.
ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரியை சேர்ந்த 39 மீனவர்களை இடிந்தகரை மீனவர்கள் சிறை பிடித்துள்ளனர். ஆம், தூண்டில் போட்டு மீன் பிடிப்பதால் வலைகள் அறுந்து விடுவதாக கூறி ஏழு படகுகளுடன் 39 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.